செய்திகள்

பன்னூன் கொ* சதி வழக்கு – இந்தியர் நிகில் குப்தாவுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை கோரும் அமெரிக்கா!

பன்னூன் கொ* சதி வழக்கு – இந்தியர் நிகில் குப்தாவுக்கு 24 ஆண்டுகள் சிறை தண்டனை கோரும் அமெரிக்கா!

அமெரிக்காவில் காலிஸ்தான் பிரிவினைவாத தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னூனை கொ* செய்ய சதி செய்ததாகக் கூறப்படும் வழக்கில், இந்தியரான நிகில் குப்தாவுக்கு 24 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை விதிக்க வேண்டும் என அமெரிக்க அரசு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளது.

நிகில் குப்தா மீது கொலை செய்ய ஒப்பந்தம் செய்தல், அதற்கான சதித்திட்டம் தீட்டுதல் மற்றும் பணமோசடி சதி உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இந்த மூன்று குற்றச்சாட்டுகளையும் அவர் கடந்த பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.

அமெரிக்காவின் நியூயார்க் தெற்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்றுவரும் இந்த வழக்கில், நிகில் குப்தாவுக்கு 293 மாதங்கள், அதாவது சுமார் 24 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் சிறை தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வலியுறுத்தியுள்ளது.

இதற்கிடையே, நிகில் குப்தா தரப்பு வழக்கறிஞர்கள் 12 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து நிகில் குப்தா நீதிபதிக்கு கடிதமும் எழுதியுள்ளார்.

இந்த வழக்கின் இறுதிக்கட்ட விசாரணை மற்றும் தண்டனை அறிவிப்பு நவம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ளது. அமெரிக்க மாவட்ட நீதிபதி விக்டர் மரேரோ இந்த வழக்கில் இறுதி தண்டனையை அறிவிக்க உள்ளார்.

இந்த விவகாரம் இந்தியா – அமெரிக்கா இடையிலான உறவுகளிலும் கவனத்தைப் பெற்றுள்ள நிலையில், இந்த வழக்கின் இறுதித் தீர்ப்பை சர்வதேச நாடுகள் எதிர்பார்த்து வருகின்றன