செய்திகள்

“நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை”.. வி.எஸ்.பாபுவுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ உருக்கம்!

“நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை”.. வி.எஸ்.பாபுவுக்கு அஞ்சலி செலுத்திய வைகோ உருக்கம்!

கொளத்தூர் தொகுதி தவெக சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபுவின் மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் அஞ்சலி செலுத்தினார்.

வி.எஸ்.பாபுவின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்திய வைகோ, அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வி.எஸ்.பாபுவின் மறைவு மிகுந்த அதிர்ச்சியையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், வாழ்க்கையின் நிலையாமையை எடுத்துரைக்கும் திருக்குறளான “நெருநல் உளன் ஒருவன் இன்று இல்லை எனும் பெருமை உடைத்து இவ்வுலகு” என்பதை மேற்கோள் காட்டி, வாழ்க்கையின் நிலையாமை குறித்த தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

திமுகவில் தொடங்கி அதிமுக, தமிழக வெற்றிக் கழகம் என அரசியல் பயணத்தைத் தொடர்ந்த வி.எஸ்.பாபு, கொளத்தூர் தொகுதியில் ஸ்டாலினை தோற்கடித்து வெற்றி பெற்றவர். அவரது மறைவு அரசியல் வட்டாரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.