ஒரே நாளில் சவரனுக்கு ரூ.2,040 குறைந்த தங்கம் விலை! சென்னையில் இன்றைய தங்கம், வெள்ளி நிலவரம்!

தங்கம் வாங்கத் திட்டமிட்டு காத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று நவம்பர் 18-ஆம் தேதி மீண்டும் கணிசமாகக் குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.255 குறைந்து ரூ.12,215-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,040 குறைந்து ரூ.97,720 ஆக உள்ளது.
கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு கிராம் ரூ.12,470-க்கும், ஒரு சவரன் ரூ.99,760-க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று தங்கத்தின் விலை ஒரு லட்சம் ரூபாய்க்கும் கீழே தொடர்ந்து நீடிக்கிறது.
18 கேரட் தங்கத்தின் விலையும் கணிசமாகக் குறைந்துள்ளது. கிராமுக்கு ரூ.485 சரிந்து ரூ.9,720-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இன்றைய தங்கம் விலை நிலவரம்:
- 22 கேரட் தங்கம் – ஒரு கிராம் ரூ.12,215
- 22 கேரட் தங்கம் – ஒரு சவரன் ரூ.97,720
- 18 கேரட் தங்கம் – ஒரு கிராம் ரூ.9,720
வெள்ளி விலை நிலவரம்:
தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.185-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.1,85,000 ஆக உள்ளது.
தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவது நகை வாங்கத் திட்டமிடும் மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இருப்பினும், நகைக் கடைகளில் செய்கூலி, சேதாரம் மற்றும் ஜிஎஸ்டி உள்ளிட்ட கூடுதல் கட்டணங்கள் சேர்க்கப்படுவதால் இறுதி விலையில் மாற்றம் இருக்கும் என்பதை வாங்குவோர் கவனத்தில் கொள்ள வேண்டும்.
