செய்திகள்

தமிழகத்தில் இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்!

தமிழகத்தில் இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்!

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்தப் பணிகள் (SSR) நடைபெற்று வரும் நிலையில், இன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுகிறது. இதன் மூலம் மாநிலத்தில் உள்ள வாக்காளர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளதா என்பதைச் சரிபார்த்துக் கொள்ளலாம்.

வரைவு பட்டியல் வெளியான பிறகு, வாக்காளர்கள் தங்களது பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களைச் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். பெயர் விடுபட்டிருந்தால் புதிதாகச் சேர்க்கவும், ஏற்கனவே உள்ள விவரங்களில் பிழைகள் இருந்தால் திருத்தவும் டிசம்பர் 11ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

பெயர் சேர்க்க படிவம் 6, பெயர் நீக்கம் செய்ய படிவம் 7, விவரங்களைத் திருத்த அல்லது முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். இதற்கான விண்ணப்பங்களை வாக்காளர் சேவை இணையதளம் மற்றும் ECINET செயலி மூலமாகவும் சமர்ப்பிக்கலாம்.

பெறப்படும் விண்ணப்பங்கள் டிசம்பர் 28ஆம் தேதிக்குள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் 2027 ஜனவரி 4ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. எனவே, வாக்காளர்கள் தங்களது பெயர் மற்றும் விவரங்களைத் தவறாமல் சரிபார்த்துக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.