தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,880 குறைவு.. நகை வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!
தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்க காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கல்யாண் ஜூவல்லர்ஸ் வெளியிட்டுள்ள விலை நிலவரப்படி, நவம்பர் 19-ம் தேதி தங்கம் விலை கணிசமாகக் குறைந்துள்ளது.
அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,980-க்கும், ஒரு சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது ஒரு கிராமுக்கு ரூ.235-ம், ஒரு சவரனுக்கு ரூ.1,880-ம் குறைந்துள்ளது.
அதேபோல், 24 கேரட் தூய தங்கம் ஒரு கிராம் ரூ.13,069-க்கும், 10 கிராம் ரூ.1,30,690-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விலையும் கிராமுக்கு ரூ.256, 8 கிராமுக்கு ரூ.2,048 குறைந்துள்ளது.
18 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.9,802 ஆகவும், 14 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.7,624 ஆகவும் உள்ளது.
வெள்ளி விலையும் சரிவைக் கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.180-க்கும், ஒரு கிலோ ரூ.1,80,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. முந்தைய நாளுடன் ஒப்பிடும்போது கிராமுக்கு ரூ.5, கிலோவுக்கு ரூ.5,000 குறைந்துள்ளது.
தங்கம் மற்றும் வெள்ளி விலையில் ஏற்பட்டுள்ள இந்த சரிவு, திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளுக்காக நகை வாங்க திட்டமிட்டுள்ள மக்களுக்கு ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது.
