புதுச்சேரியில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு: ஒரே வாரத்தில் 4 பேர் உ*ரிழப்பு – பொதுமக்களுக்கு எச்சரிக்கை!
புதுச்சேரியில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், ஒரே வாரத்திற்குள் 4 பேர் உ*ரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உ*ரிழந்தவர்களில் பள்ளி மாணவி, கல்லூரி மாணவி மற்றும் மருத்துவப் பணியாளர் உள்ளிட்டோர் இருப்பது கவலையை அதிகரித்துள்ளது.
கடந்த வாரம் முதலியார்பேட்டை அனிதா நகரைச் சேர்ந்த 22 வயதான முகமது இர்பான் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உ*ரிழந்தார். இதனைத் தொடர்ந்து, திங்கள்கிழமை பிச்சைவீரன்பேட்டை பகுதியைச் சேர்ந்த 19 வயதான கல்லூரி மாணவி ஹரிணி உ*ரிழந்தார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை மேலும் இரண்டு பேர் டெங்கு பாதிப்பால் உ*ரிழந்துள்ளனர். அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த 29 வயதான செவிலியர் அதிகாரி பிரீத்தி மற்றும் நொணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்த 16 வயதான பள்ளி மாணவி நிஷிதா ஆகியோர் உ*ரிழந்துள்ளனர். இதன் மூலம் புதுச்சேரியில் டெங்கு உ*ரிழப்புகளின் எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது.
டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்!
டெங்கு பாதிப்பு அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, நவம்பர் 25 முதல் புதுச்சேரியில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் சமூக சுகாதார மையங்களிலும் வீடுகளில் கொசு உற்பத்தியாகும் இடங்களைக் கண்டறியும் சிறப்புக் குழுக்கள் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளன.
மேலும், டெங்கு பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதிகளில் நகராட்சிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு ஒழிப்புப் பணிகள், புகை மருந்து தெளித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அறிவுறுத்தல்!
ஏடிஸ் வகை கொசுக்கள் பகல் நேரங்களில் அதிகம் கடிப்பதுடன், சுத்தமான தேங்கிய நீரில் இனப்பெருக்கம் செய்கின்றன. எனவே, வீடுகளில் உள்ள பூந்தொட்டிகள், வாளிகள், பழைய டயர்கள், தேங்காய் ஓடுகள் உள்ளிட்டவற்றில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
மேலும், தண்ணீர் தொட்டிகளை மூடி வைக்கவும், வாரத்திற்கு ஒருமுறை தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களைச் சுத்தம் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. காய்ச்சல், கடுமையான வயிற்றுவலி, தொடர்ந்து வாந்தி, ரத்தக்கசிவு அல்லது அதிகப்படியான சோர்வு போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுக வேண்டும் என்றும் சுகாதாரத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.
புதுச்சேரியில் அடுத்தடுத்து ஏற்பட்டுள்ள டெங்கு உயிரிழப்புகள் மக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நோய் பரவலைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை தடுப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
