செய்திகள்

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி… ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்த தங்கம்!

நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி செய்தி... ஒரே நாளில் சவரனுக்கு ரூ.960 குறைந்த தங்கம்!

சென்னையில் தங்கம் விலை தொடர்ந்து சரிந்து வருவது நகை வாங்கக் காத்திருப்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த வகையில், இன்று (நவம்பர் 13) ஒரே நாளில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, அக்டோபர் மாதத்தில் வரலாறு காணாத உச்சத்தைத் தொட்ட தங்கம் விலை, பின்னர் படிப்படியாகச் சரியத் தொடங்கியது. நவம்பர் மாதத் தொடக்கத்திலும் விலை உயர்வு காணப்பட்ட நிலையில், கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து சரிவு ஏற்பட்டு வருகிறது.

இன்றைய தங்கம் விலை நிலவரம்:

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.12,695-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஒரு சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.960 குறைந்து ரூ.1,01,560 ஆக உள்ளது.

நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.12,815-க்கும், ஒரு சவரன் ரூ.1,02,520-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையும் சரிவு!

தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.5 குறைந்து ரூ.195-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து தங்கம் விலை குறைந்து வருவதால் நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.