செய்திகள்

உலக அரசியலில் வரலாற்றுச் சந்திப்பு! ஒரே மேடையில் டிரம்ப், ஜி ஜின்பிங், புதின் – நவம்பர் 19ல் முத்தரப்பு மாநாடு!

உலக அரசியலில் வரலாற்றுச் சந்திப்பு! ஒரே மேடையில் டிரம்ப், ஜி ஜின்பிங், புதின் – நவம்பர் 19ல் முத்தரப்பு மாநாடு!

சீனாவின் ஷென்சென் நகரில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோர் பங்கேற்கும் முதல் முத்தரப்பு உச்சி மாநாடு நவம்பர் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை சீன வெளியுறவு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்துள்ளது.

இந்தச் சந்திப்பு ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) மாநாட்டின் ஒரு பகுதியாக நடைபெற உள்ளது. உலகின் மூன்று முக்கிய வல்லரசு நாடுகளின் தலைவர்கள் ஒரே மேடையில் சந்திப்பது சர்வதேச அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

இந்தக் கூட்டத்தில் அணு ஆயுதக் குறைப்பு, சர்வதேச பாதுகாப்பு மற்றும் ஈரான் போர் உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, உலக நாடுகளின் அணு ஆயுதங்களைக் குறைப்பது தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், உக்ரைன் போர் விவகாரம் குறித்தும் ரஷ்யாவின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெறுகிறது.

அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் சர்வதேச உறவுகள் தொடர்பாக பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வரும் நிலையில், இந்தச் சந்திப்பு உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த மாநாட்டில் எடுக்கப்படும் முடிவுகள் சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார உறவுகளில் எந்த மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது