மகனுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த அஜித்… பள்ளிக்கே நேரில் சென்ற அப்பா!
நடிகர் அஜித்குமார் தனது மகனுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில் பள்ளிக்கே நேரில் சென்று அழைத்துச் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்குமார், தற்போது தனது திரைப்படப் பணிகளுக்கு இடையே குடும்பத்தினருடனும் நேரத்தைச் செலவிட்டு வருகிறார். இவரது மனைவி ஷாலினியும் அவ்வப்போது குடும்பத்துடன் இருக்கும் அழகான தருணங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்.
அந்த வகையில், தற்போது ஷாலினி அஜித்குமார் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அழகான புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். அதில், அஜித்குமார் தனது மகனை அன்புடன் கட்டியணைக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
மேலும், மகனை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக அஜித் திடீரென பள்ளிக்குச் சென்றதால், அது மகனுக்கு சர்ப்ரைஸாக அமைந்துள்ளது. இதனை ‘Surprise School Pick Up’ எனக் குறிப்பிட்டு ஷாலினி புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
இந்தப் புகைப்படம் வெளியான சிறிது நேரத்திலேயே அஜித் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது. பலரும் தங்களது அன்பையும் வாழ்த்துகளையும் கருத்துகள் மூலம் தெரிவித்து வருகின்றனர்.
திரைப்படங்களில் பிஸியாக இருந்தாலும், குழந்தைகளுடன் நேரம் செலவிடுவதற்கு அஜித் முக்கியத்துவம் அளிப்பது ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. அப்பா – மகன் இடையேயான இந்த அழகான தருணம் தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
