செய்திகள்

தவெக எம்எல்ஏ விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை தேவை!

தவெக எம்எல்ஏ விவகாரத்தில் அதிரடி நடவடிக்கை தேவை!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆ*ச வாட்ஸ்அப் குறுஞ்செய்திகளை அனுப்பியதாக எழுந்துள்ள புகார் குறித்து விசிடிகே தலைவர் தொல். திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், அவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

இந்த விவகாரம் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் உயர் அதிகாரிகளிடம் புகார் அளித்து, உரிய விசாரணை நடத்துவதுடன் எம்எல்ஏவை கைது செய்யவும் வலியுறுத்தியுள்ளன. அதேநேரத்தில், தன் மீதான குற்றச்சாட்டுகளை அருள் விக்னேஷ் மறுத்துள்ளார். இந்த விவகாரம் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.