செய்திகள்

மேகதாது அணை விவகாரம்… முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் அவசரக் கடிதம்!

மேகதாது அணை விவகாரம்... முதல்வர் விஜய்க்கு ஸ்டாலின் அவசரக் கடிதம்!

கர்நாடக அரசு மேகதாது அணை கட்டுவதில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தமிழகத்தின் காவிரி நீர் உரிமையைப் பாதுகாக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழக முதலமைச்சர் விஜய்க்குக் கடிதம் எழுதியுள்ளார்.

நவம்பர் 13ஆம் தேதி மைசூரில் நடைபெற்ற அரசு விழாவில், பிரதமர் மோடி முன்னிலையில் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார், மேகதாது அணையைக் கட்டுவதை யாராலும் தடுக்க முடியாது எனத் தெரிவித்திருந்தார். இந்தப் பேச்சு தமிழக விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, காவிரி விவகாரத்தில் தமிழக அரசு இனியும் மௌனம் காக்கக் கூடாது என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும், கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதை விட சட்டப்பூர்வமாகவே தமிழகத்தின் உரிமைகளைப் பெற வேண்டும் என்றும் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழகத்தின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்றும், அக்கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களுடன் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்தையும் இணைத்து, அனைத்துக் கட்சித் தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் மூலம் பிரதமர் மோடியை நேரில் சந்தித்து வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.