செய்திகள்

போ*ப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால் காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்! தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு!

போ*ப்பொருள் புழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தவறினால் காவல் ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்! தமிழக டிஜிபி அதிரடி உத்தரவு!

தமிழகத்தில் போ*ப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனையைத் தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மகேஷ் குமார் அகர்வால் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதன்படி, காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போ*ப்பொருள் உட்கொண்டதால் உ*ரிழப்பு ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுவார் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், உள்ளூர் காவல்துறையினரின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் மத்திய விசாரணை அமைப்புகள் போ*ப்பொருட்களைக் கைப்பற்றினாலும், சம்பந்தப்பட்ட காவல் நிலைய ஆய்வாளர் மீது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 10ஆம் தேதி நடைபெற்ற வாராந்திர சட்டம் ஒழுங்கு ஆய்வுக் கூட்டத்தைத் தொடர்ந்து இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

மேலும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும், மாநிலம் முழுவதும் மட்டுமின்றி மண்டல மற்றும் மாவட்ட அளவிலும் சிறப்பு சோதனைகள் நடத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

போ*ப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளில் அலட்சியமாகச் செயல்படும் அதிகாரிகள் மீதும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என டிஜிபி எச்சரித்துள்ளார்.