செய்திகள்

சில நிமிடங்களில் வெள்ளக்காடான ராமநாதபுரம்… வாகன ஓட்டிகள் அவதி!

சில நிமிடங்களில் வெள்ளக்காடான ராமநாதபுரம்... வாகன ஓட்டிகள் அவதி!

ராமநாதபுரம் மாவட்டத்தில் திடீரென பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

இரவு முதல் தொடர்ந்து பெய்த கனமழையின் காரணமாக ராமநாதபுரம் நகர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக மதுரை – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கியது.

இதனால் ரோமன் சர்ச் பகுதியிலுள்ள தேசிய நெடுஞ்சாலை மற்றும் பெட்ரோல் பங்க் உள்ளிட்ட இடங்கள் மழைநீரில் மூழ்கின. சில இடங்களில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பாதசாரிகளும் சாலையைக் கடக்க முடியாமல் அவதிப்பட்டனர்.

எதிர்பாராத விதமாக பெய்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ள நிலையில், மழைநீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.