செய்திகள்

இனி கூடுதல் கட்டிடப் பரப்புக்கு மட்டுமே கட்டணம்! தமிழக அரசு புதிய விளக்கம்!

இனி கூடுதல் கட்டிடப் பரப்புக்கு மட்டுமே கட்டணம்! தமிழக அரசு புதிய விளக்கம்!

தமிழகத்தில் கட்டிட வரைபட அனுமதியில் கூடுதல் கட்டிடப் பரப்பை சேர்க்க விரும்புவோருக்கு கட்டண நடைமுறையில் புதிய விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அனுமதி பெற்ற கட்டிடத்தில் கூடுதல் பரப்பளவு கட்ட விரும்பினால், முன்பு செலுத்திய கட்டணத்தை கழித்துவிட்டு, கூடுதலாக கட்டப்படும் பரப்புக்கு மட்டுமே கட்டணம் செலுத்தினால் போதும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு, ஏற்கெனவே ஒரு லட்சம் சதுர அடி கட்டிடத்திற்கு அனுமதி பெற்று, மேலும் 10 ஆயிரம் சதுர அடி கூடுதலாக கட்ட அனுமதி கோரினால், மொத்தம் 1.10 லட்சம் சதுர அடிக்கும் சேர்த்து கட்டணம் கணக்கிடப்பட்டு வந்தது.

தற்போதைய புதிய நடைமுறையின்படி, மொத்த கட்டிடப் பரப்பிற்கான கட்டணத்தை கணக்கிட்டு, ஏற்கெனவே அனுமதி பெற்ற பரப்பிற்காக செலுத்திய தொகையை கழித்துவிட்டு, மீதமுள்ள தொகையை மட்டும் செலுத்தினால் போதும் என தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் கூடுதல் கட்டிடப் பரப்புக்கு அனுமதி பெற விரும்பும் கட்டிட உரிமையாளர்களுக்கு நிதிச்சுமையை குறைக்கும் வகையில் அமைந்துள்ளது.

மேலும், தமிழகத்தில் கட்டிட விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்றங்களின் ஒரு பகுதியாக இந்த கட்டண நடைமுறை திருத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கட்டிட அனுமதி தொடர்பான நடைமுறைகள் எளிமையாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.