செய்திகள்

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு… சவரன் ரூ.91 ஆயிரமாகக் குறைந்தது!

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு... சவரன் ரூ.91 ஆயிரமாகக் குறைந்தது!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.295 குறைந்து ரூ.11,420-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதன் மூலம் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.2,360 குறைந்து ரூ.91,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை ஒரே நாளில் கணிசமாகக் குறைந்திருப்பது நகை வாங்கத் திட்டமிட்டுள்ள பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் பொருளாதார மாற்றங்கள் தங்கத்தின் விலையில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.