செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தயங்கவில்லை… அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க தயங்கவில்லை... அமைச்சர் அருண்ராஜ் விளக்கம்!

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார் தொடர்பாக தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்கவில்லை என்றும், இந்த விவகாரத்தில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட பெண் ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது புகார் எழுந்தது. இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் அருண்ராஜ், தமிழக அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாகக் கூறுவது தவறு என்றும், தற்போது விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும், கடந்த கால திமுக ஆட்சியில் பெண்கள் எந்த அளவுக்குப் பாதுகாப்பின்றியும் அச்சத்துடனும் இருந்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என்றும் அவர் விமர்சித்தார்.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் காவல்துறையின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.