செய்திகள்

கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்… பெண் ஆட்சியரிடம் எஸ்.பி சிருஷ்டி சிங் நேரில் விசாரணை!

கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம்... பெண் ஆட்சியரிடம் எஸ்பி சிருஷ்டி சிங் நேரில் விசாரணை!

கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பியதாக எழுந்த புகார் தொடர்பாக, புகார் அளித்த பெண் மாவட்ட ஆட்சியரிடம் காவல் கண்காணிப்பாளர் சிருஷ்டி சிங் நேரில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

மாவட்ட ஆட்சியர் அளித்த புகாரின் அடிப்படையில் அருள் விக்னேஷ் மீது அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் விசாரணையைத் தீவிரப்படுத்தும் வகையில், எஸ்பி சிருஷ்டி சிங் மாவட்ட ஆட்சியரின் இல்லத்திற்கே நேரில் சென்று அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

இதற்கிடையே, கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சுமார் 4 மணி நேரமாக வழக்கு தொடர்பான விசாரணைக் கோப்புகளை ஆய்வு செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே இந்த வழக்கை மூத்த காவல்துறை அதிகாரிகள் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், தற்போது மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக விசாரணை நடத்தப்படுவது இந்த விவகாரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இதனால் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார் தொடர்பான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்த எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.