செய்திகள்

தங்கம் விலையில் அதிரடி சரிவு… நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

தங்கம் விலையில் அதிரடி சரிவு... நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி!

சென்னையில் தங்கத்தின் விலை நவம்பர் 14ஆம் தேதியான இன்று சவரனுக்கு ரூ.640 குறைந்துள்ளது. இதனால் நகை வாங்கத் திட்டமிடும் மக்களுக்கு ஓரளவு மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

அதன்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.80 குறைந்து ரூ.12,615-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் ரூ.1,00,920-க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று ஒரு சவரன் ரூ.1,01,560-க்கு விற்பனையானது.

கடந்த நவம்பர் 13ஆம் தேதி சவரனுக்கு ரூ.960 குறைந்த நிலையில், இன்றும் விலை சரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலையில் மாற்றமில்லை!

தங்கத்தின் விலை குறைந்துள்ள நிலையில், வெள்ளியின் விலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.195-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,95,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.