செய்திகள்

2027 சட்டமன்றத் தேர்தல் – பஞ்சாபில் தேர்தல் பணிகளைத் தொடங்கிய பாஜக!

2027 சட்டமன்றத் தேர்தல் – பஞ்சாபில் தேர்தல் பணிகளைத் தொடங்கிய பாஜக!

2027ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பாஜக தேர்தல் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு மற்றும் குற்றச்சாட்டுப் பட்டியல் தயாரிக்கும் குழு என இரண்டு முக்கியக் குழுக்களை அக்கட்சி அமைத்துள்ளது.

இதற்கான அறிவிப்பை நவம்பர் 15ஆம் தேதி சண்டிகரில் பஞ்சாப் மாநில பாஜக தலைவர் கேவல் சிங் தில்லான் வெளியிட்டார்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக அவினாஷ் ராய் கண்ணா நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் மன்பிரீத் சிங் பாதல், அஸ்வானி சர்மா, எச்.எஸ். பூல்கா உள்ளிட்ட 14 தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர்.

அதேபோல், ஆளும் கட்சியின் செயல்பாடுகள் மற்றும் அரசியல் குற்றச்சாட்டுகளைத் தொகுத்து அறிக்கை தயாரிக்கும் குழுவின் தலைவராக முன்னாள் பஞ்சாப் மாநிலத் தலைவர் சுனில் ஜாக்கர் நியமிக்கப்பட்டுள்ளார். இந்தக் குழுவில் இக்பால் சிங் லால்புரா, விஜய் சாம்ப்லா, ரவ்னீத் சிங் பிட்டு உள்ளிட்ட 15 பேர் இடம்பெற்றுள்ளனர்.

இந்தக் குழுக்கள் மூலம் தேர்தல் அறிக்கை தயாரிப்பதுடன், தேர்தலை எதிர்கொள்வதற்கான அரசியல் மற்றும் தேர்தல் வியூகங்களையும் பாஜக வகுக்கத் திட்டமிட்டுள்ளது.