திமுகவுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி… பெண்கள் பாதுகாப்பு குறித்து கடும் விமர்சனம்!
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் பெண்கள் எந்த அளவிற்குப் பாதுகாப்பின்றியும் அச்சத்துடனும் வாழ்ந்தார்கள் என்பது மக்களுக்குத் தெரியும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீதான புகார் தொடர்பாக தமிழக அரசின் நடவடிக்கைகள் குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அவர், இந்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கத் தயங்கவில்லை என்றும், காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும், பெண்களின் பாதுகாப்பு குறித்து திமுகவினர் விமர்சிப்பதற்கு முன்பு, தங்களது ஆட்சிக் காலத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் இருந்தது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
தவெக எம்எல்ஏ மீதான புகார் தொடர்பாக உரிய விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும், விசாரணையின் அடிப்படையில் அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்.
